ஞாயிறு, 27 நவம்பர், 2011

முதல் பதிவு

  நான் எழுதும் முதல் பதிவு இது. தமிழ் கூறும் நல்லுலகில் இலட்சக்கணக்கானோர் பதிவுகளை எழுதிக்கொண்டிருக்க நான் என்ன புதியதாய் எழுதி கிழித்துவிட போகிறேன்? நீண்ட காலமாய் எனக்கு இந்த தமிழ் சமுதாயம் குறித்த பல குறைகளும், வருத்தங்களும் உண்டு. எல்லாவற்றயும் மலினப்படுத்துவதே நமது சமூக பண்பாகிவிட்டிருக்கிறது. உணவில் துவங்கி கலை, இலக்கியம், சினிமா, அரசியல், பண்பாடு என அனைத்து துறைகளையும் அடுத்தடுத்த தளங்களை நோக்கி நகர்த்துவதற்கான தீவிரமான முயற்சிகள் உலகெங்கிலும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் நம் தமிழ் சமூகம் அது குறித்த எந்த கவலையும் இன்றி இயங்கிக்கொண்டிருப்பதான கவலையே பதிவெழுத என்னை தூண்டியது. நான் இத்தமிழ் சமூகத்தில் வாழும் ஒரு மனிதன் என்பதைத் தவிர எனக்கு வேறு தகுதிகள் இல்லை. இத்தகுதி ஒன்றே இச்சமூகத்தை விமர்சிப்பதற்கு போதும் என நம்புகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக